Thursday, November 26, 2009

1939 ல் ஹிட்லருடன் போருக்கு தயாரான ஸ்டாலின்

1939 ம் ஆண்டு, ஹிட்லரின் ஜெர்மனி மீது படையெடுக்க ஸ்டாலின் முன்வந்தார். கிரெம்ளினில் பிரிட்டிஷ்,பிரான்ஸ் பிரதிநிதிகளை அழைத்துப் பேசப்பட்டது. ஆனால் அவர்கள் ஸ்டாலினின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. லட்சக்கணக்கான துருப்புகளை போலந்தின் எதிர்ப்பையும் மீறி ஜெர்மன் எல்லைக்கு அனுப்புவது ஸ்டாலினின் திட்டம். முன்கூட்டியே போலந்து, நாசி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஸ்டாலினின் போர்த் திட்டத்திற்கு பிரிட்டனும், பிரான்சும் முன்வராத காரணத்தால் தான், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது தான், செக்கோஸ்லாவாக்கியவை ஹிட்லர் ஆக்கிரமிப்பதற்கு பிரிட்டன் அனுமதித்திருந்தது. அன்றைய நிலையில் பிரிட்டனோ, பிரான்சோ ஸ்டாலினுடன் சேர்ந்து ஜெர்மனி மீது போர் தொடுக்க முன்வரவில்லை. இந்த தகவல்கள் யாவும் அண்மையில் பகிரங்கப்படுத்தப் பட்ட சோவியத் ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதுவரை காலமும், எமக்கு திரிபுபடுத்தப்பட்ட வரலாறே போதிக்கப்பட்டு வந்துள்ளது.

1 comment:

அர டிக்கெட்டு! said...

இங்கிலாந்து கம்யூனிசத்திற்கு எதிராக ஜெர்மானிய நாசிசம்தான் சிறந்த அரண் என்று கருதியதும், ஹிட்லர் வாய்ப்புகள் இருந்தும் இங்கிலாந்தை தாக்குவதை தவிர்த்ததும், ஹிட்லரின் தளபதி ருடால்ஃப் ஹெஸ்'சினுடைய 1941 இங்கிலாந்து பயணமும், இங்கிலாந்து முதலாளிவர்க்கத்திலேயே பலர் நாசி அனுதாபிகளாக இருந்ததும் இன்னமும் பல வெளிவராத துரோகங்களும் 'ராஜ'தந்திரங்களும் நிறைந்ததுதான் இரண்டாம் உலகப்போரின் அரசியல்.கம்யூனிச பூதத்தின் அச்சுறுத்தல் உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டிருக்கும் வரை இதன் உண்மையான வரலாறு வெளியே தெரிய வாய்ப்பே இல்லை....